டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையத்தில் வாலிபருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையத்தில் வாலிபருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
x

டி.என்.பி.எஸ்.சி தேர்வு மையத்தில் வாலிபருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

செ ஞ்சி.

செஞ்சியை அடுத்த அங்கராயநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று குரூப்-2 தேர்வு நடைபெற்றது. இங்கு தேர்வு எழுதிய திண்டிவனம் அடுத்த தெள்ளார் கிராமத்தை சேர்ந்த பி.எஸ்சி. பட்டதாரியான நிர்மல் ஜோயல் (வயது 23) என்பவருக்கு, திடீரென தேர்வு மையத்தில் வலிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தால் தேர்வு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story