டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 23,953 பேர் எழுதினர்


டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 23,953 பேர் எழுதினர்
x

தென்காசி மாவட்டத்தில் நேற்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வினை 23 ஆயிரத்து 953 பேர் எழுதினார்கள்.

தென்காசி

தென்காசி:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள் தொகுதி 2 மற்றும் தொகுதி 2 ஏ ஆகியவற்றிற்கு தொடங்கி நடைபெறுகிறது. தென்காசி கல்வி மாவட்டத்தில் 57 மையங்களிலும், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் 35 மையங்களிலும், ஆக மொத்தம் 92 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

தென்காசி கல்வி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 556 பேர்களுக்கு 15 ஆயிரத்து 184 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 2,372 பேர் தேர்வு எழுதவில்லை. சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 731 பேருக்கு 8 ஆயிரத்து 769 பேர் எழுதினார்கள். இதில் 962 பேர் தேர்வு எழுதவில்லை. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 27 ஆயிரத்து 287 பேருக்கு 23 ஆயிரத்து 953 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 3,334 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story