கறிக்கோழி வளர்ப்பு தொழிலுக்கு உதவ வேண்டும்
கறிக்கோழி வளர்ப்பு தொழிலுக்கு அரசு உதவ வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொள்ளாச்சி
கறிக்கோழி வளர்ப்பு தொழிலுக்கு அரசு உதவ வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கறிக்கோழி பண்ணைகள்
தமிழகத்தில் பொள்ளாச்சி, பல்லடம், சுல்தான்பேட்டை உள்பட பல இடங்களில் 25ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அவை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட வௌிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பப்படுகிறது. பண்ணை கொள் முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) மூலம் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஒரே இடத்தில் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோழிகள் வளர்க்கும் கோழி பண்ணைகள் 2023-ம் ஆண்டு ஜன வரி 1-ந் தேதி முதல் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, கூலி உயர்வு இன்மை, பராமரிப்பு செலவு, நோய் தாக்குதல், கடும் வெயில் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் சுல்தான்பேட்டை பகுதிகளில் கோழிப் பண்ணை அமைப்பது வெகுவாக குறைந்து விட்டது.
அந்த தொழிலில் ஈடுபட பலரும் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர். எனவே கோழிப்பண்ணை தொழில் வளர தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உதவ வேண்டும்
இது குறித்து விவசாயிகள், தொழில் முனைவோர் கூறியதாவது:-
கறிக்கோழி வளர்ப்பை, உபரி வருமானத்திற்காக பலர் மேற் கொள்கின்றனர். முன்பு விவசாயத்தில் நஷ்டம் அடைந்தவர்கள், கறிக்கோழி வளர்ப்பு பண்ணை அமைத்தனர். ஆனால் தற்போது கறிக்கோழி வளர்க்க கூலி உயர்வு இல்லை, பண்ணை பராமரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.இதனால் அந்த தொழிலில் ஈடுபட பலரும் தயக்கம் காட்டுகின்ற னர்.
எனவே கறிக்கோழி தொழில் மேம்பட குறைந்த வட்டியில் அரசு கடனுதவி, மின் கட்டணத்தில் சலுகை உள்ளிட்ட உதவிகளை அரசு செய்ய வேண்டும். மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் கறிக் கோழி வளர்ப்பு தொழிலில் பலரும் ஆர்வம் காட்ட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.