விபத்து ஏற்படுவதை தடுக்கஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்


விபத்து ஏற்படுவதை தடுக்கஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
x

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க வருகிற 23-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஈரோடு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் விபத்து ஏற்படுவதை தடுக்க வருகிற 23-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து நெரில்

ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய பகுதியாக பன்னீர்செல்வம் பூங்கா உள்ளது. அங்கு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், சாலையோர கடைகள் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், திங்கட்கிழமை இரவும், செவ்வாய்க்கிழமையும் வாரச்சந்தை கூடுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதிகமான வாகனங்கள் பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் கடந்து செல்வதால் சிக்னலுக்கு நீண்ட நேரமாக வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், சாலையை கடக்க முடியாமல் நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பலர் காயம் அடைந்து உள்ளனர்.

ஒரு வழிப்பாதை

இந்தநிலையில் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுவதை தடுக்கவும், சாலையை கடப்பவர்கள் சிரமமின்றி செல்வதற்கும் வாகன போக்குவரத்து தற்காலிகமாக மாற்றி அமைக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறியதாவது:-

ஈரோடு திருவேங்கடசாமி வீதி ஒருவழிப்பாதை மாற்றி அமைக்கப்படுகிறது. பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து திருவேங்கடசாமி வீதிக்கு வாகனங்கள் நேரடியாக செல்லலாம். மறுவழியில் வரும் வாகனங்கள் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு சந்திப்பு, பெரியார்மன்ற சந்திப்பு வழியாக பன்னீர்செல்வம் பூங்காவை சென்றடையலாம். அல்லது ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக மீனாட்சி சுந்தரனார் சாலையிலும் இணையலாம். இந்த போக்குவரத்து மாற்றம் வருகிற 23-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் போக்குவரத்து மாற்றுத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story