விபத்தை தடுக்க உத்தமபாளையம்-கம்பம் பைபாஸ் சாலையில் அறிவிப்பு பலகை


விபத்தை தடுக்க   உத்தமபாளையம்-கம்பம் பைபாஸ் சாலையில் அறிவிப்பு பலகை
x

விபத்தை தடுக்க உத்தமபாளையம்-கம்பம் பைபாஸ் சாலையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது

தேனி

உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் செல்வதற்கு கோகிலாபுரம் விலக்கு வழியாக புதிதாக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் ெதாடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலை மணி தலைமையில் போலீசார் பைபாஸ் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி டிரைவர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர். இந்நிலையில் பைபாஸ் சாலையில் விபத்தை தடுக்க கோகிலாபுரம் விலக்கு, அனுமந்தன்பட்டி ரவுண்டானா பகுதி ஆகிய இடங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தேவையின்றி சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்துவதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை செய்கின்றனர். மேலும் பைபாஸ் சாலையில் தொடர் விபத்து பகுதிகள் குறித்து குறிப்பிட்ட இடங்களில் போலீசார் அறிவிப்பு பலகை வைத்து வருகின்றனர்.


Next Story