கொள்ளை சம்பவங்களை தடுக்க கிராமங்களில் கண்காணிப்பு கேமரா - போலீசார் அறிவுறுத்தல்


கொள்ளை சம்பவங்களை தடுக்க கிராமங்களில் கண்காணிப்பு கேமரா - போலீசார் அறிவுறுத்தல்
x

கொள்ளை சம்பவங்களை தடுக்க கிராமங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

மதுரை

திருமங்கலம்,

கொள்ளை சம்பவங்களை தடுக்க கிராமங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

விழிப்புணர்வு கூட்டம்

திருமங்கலம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு திருமங்கலம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிராமங்கள் தோறும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும்.

இதற்காக காவல்துறை சார்பாக கிராமங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கண்காணிப்பு கேமரா

கூட்டத்திற்கு திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கீழக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி, மேலக்கோட்டை கோபிநாத், ஆலம்பட்டி முருகேசன், கிழவனேரி செல்வகுமார், அச்சம்பட்டி மல்லிகா பாபு, நடுவக்கோட்டை செல்வம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கிராமங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு கிராமங்கள்தோறும் கண்காணிப்பு கேமராக்களை கிராமங்கள் சார்பாக வைக்க வேண்டும். இதன் மூலம் கொள்ளைசம்பவங்களை தடுக்க முடியும். கிராமத்தில் அன்னியர்கள் நடமாட்டம் மற்றும் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் அறிவுறுத்தினார்.


Next Story