போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க பெட்டிக்கடைகளில் கலெக்டர் திடீர் சோதனை


போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க  பெட்டிக்கடைகளில் கலெக்டர் திடீர் சோதனை
x

தேனி அருகே போதைப்பொருள் விற்பனையை தடுக்க பெட்டிக்கடைகளில் கலெக்டர் திடீர் சோதனை நடத்தினார்

தேனி

தேனி அருகே அரண்மனைப்புதூர், ஜங்கால்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் சோதனையில் ஈடுபட்டார். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதைப் பொருட்கள் எதுவும் விற்பனை செய்யப்படுகிறதா? என அவர் சோதனையிட்டார். மேலும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் அவர் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் நின்ற பொதுமக்களிடம் போதைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக தெரியவந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.


Next Story