ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும்


ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும்
x

ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.

வேலூர்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கு குற்ற விசாரணை மற்றும் சைபர் கிரைம் குறித்து கலந்தாய்வு மற்றும் பயிற்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு குற்றப்பிரிவு ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சித்தன்னன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலு சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன், கவுதமன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சித்தன்னன், போலீசாருக்கு சிறார் குற்றங்கள், பாலியல் குற்றங்கள் உள்பட பல குற்றங்கள் குறித்து விளக்கி கூறி, நிறைய படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் போலீசார் பொதுமக்களுடன் நட்புடன் பழக வேண்டும் என்றும், அவர்கள் கூற வரும் கருத்துகள் மற்றும் குற்றங்களை கனிவாக கேட்க வேண்டும் என்றும், ஏழைகளுக்கு போலீசார் சேவை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

ெதாடர்ந்து போலீசாருக்கு நீதிபதிகள் குறித்த சிறப்பு சட்டங்கள் மற்றும் தூதரக அலுவலர்கள் சட்டங்களை மேற்கோள்காட்டி பேசினார்.



Related Tags :
Next Story