முன்விரோதத்தில் சாக்கு வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு


முன்விரோதத்தில் சாக்கு வியாபாரிக்கு   சரமாரி அரிவாள் வெட்டு
x

முன்விரோதத்தில் சாக்கு வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

தஞ்சாவூர்

கும்பகோணம்,

கும்பகோணத்தில் பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக சாக்கு வியாபாரிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாக்கு வியாபாரி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை பாரதியார் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது45). ரியல் எஸ்டேட் மற்றும் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்துமதி ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். வினோத் மீது கும்பகோணம் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் வினோத்துக்கும், அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

சரமாரி அரிவாள் வெட்டு

நேற்று காலை 9 மணி அளவில் வினோத், கும்பகோணம் எல்.பி.எஸ். சாலையில் தேனீர் அருந்த நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வினோத்தை கழுத்து, தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் வினோத் உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வினோத்தை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்ைசக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகி்ச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் இந்துமதி புகார் செய்தார். அதன் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை வெட்டியவர்கள் யார்? என்ன காரணம்? என பல்ேவறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் சாக்குவியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story