தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் 5½ பவுன் நகை திருட்டு


தூங்கி கொண்டிருந்த பெண்களிடம்  5½ பவுன் நகை திருட்டு
x

பெரணமல்லூர் பகுதியில் தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் 5½ பவுன் நகையை மர்ம திருடிச் சென்றுள்ளார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள ஆவியம்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரின் மனைவி சிந்து (வயது 21). வீட்டில் புழுக்கமாக இருந்ததால், சிந்து வெளியே உள்ள திண்ணையில் படுத்துத் தூங்கினார். அங்கு வந்த மர்மநபர், சிந்துவின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சரடை நைசாக திருடி உள்ளார். திடுக்கிட்டு எழுந்த சிந்து திருடன்.. திருடன்.. எனக் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து மர்மநபர் 4 பவுன் தாலி சரடுடன் தப்பியோடி விட்டார்.

அதேபோல் பெரணமல்லூர் அருகில் உள்ள அன்மருதை கிராமத்தைச் சேர்ந்த விஜயின் மனைவி கீர்த்தனா (21) தனது வீட்டுககுள் படுத்துத் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்மநபர் யாரோ உள்ளே புகுந்து கீர்த்தனாவின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் சங்கிலி, 2 செல்போன்களை திருடி சென்றுள்ளார். மேலும் அதேபகுதியை சேர்ந்த ரமேஷின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்மநபர் வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடிச் சென்று விட்டார்.

மேற்கண்ட திருட்டுச் சம்பவங்கள் குறித்து தனித்தனியே பெரணமல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, திருட்டு நடந்த விவரம் பற்றி விசாரித்தனர். அடுத்தடுத்து நடந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story