ஆர்.எஸ்.மங்கலத்தில் 200 கிலோ புகையிலை பறிமுதல்
ஆர்.எஸ்.மங்கலத்தில் 200 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் பரக்கத் வீதியை சேர்ந்த செய்யது இக்ராம் (வயது29), பெத்தார் தேவன் கோட்டை வாசுதேவன் (50) ஆகியோர் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேவகோட்டை டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ஆறாவயல் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் அங்கு சென்று புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செய்யது இக்ராம், வாசுதேவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 200 கிலோ 400 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story