புகையிலை பொருட்கள் விற்பனை: 4 கடைகளுக்கு சீல்


புகையிலை பொருட்கள் விற்பனை:    4 கடைகளுக்கு சீல்
x

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

விழுப்புரம்


செஞ்சி,

செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் செஞ்சி தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமப்புற பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, நல்லாண் பிள்ளைபெற்றால் கிராமத்தில் உள்ள குமார்(வயது 48) என்பவரது கடையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதேபோன்று, பெரியாமூரில் சுமதி என்பவரது பெட்டிக்கடையில் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனந்தபுரம்

இதேபோன்று, அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போதைப் பொருள் தடுப்பு தனி பிரிவினர் அப்பம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, அப்பம்பட்டு கடைவீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது, அங்கு 3 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக கடையின் உரிமையாளர் ராமு (67) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தாலுகா சிந்தாமணி சர்வீஸ் சாலையில் உள்ள முருகன் (47) என்பவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தார். இதுபற்றி அறிந்த தாசில்தார் இளவரசன் தலைமையில் விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சிறப்பு சப்–-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் சண்முகவேலன், உதவியாளர் மகாலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் சென்று புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்க சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக முருகனை போலீசார் கைது செய்தனர்.


Next Story