புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது ெசய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டி கடைவீதி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடை வீதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் புகையிலை பொருட்களை விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story