புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள பரளி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற குளித்தலை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் பரளி 4 ரோடு பகுதியில் உள்ள தனது டீக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும், புகையிலை பொருட்கள் விற்றது தொடர்பாக ரகு, ரவிராஜன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story