புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

விழுப்புரம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பள்ளிக்கூட தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 28) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கண்ணதாசனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 32 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story