புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீசாருக்கு விருத்தாசலம் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற முனிதிரையன்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜய்(வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story