புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது


புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது
x

சாத்தூரில் புகையிைல பொருட்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே சடையம்பட்டி விலக்கு பகுதியில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் சாத்தூர் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓ.மேட்டுப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதை மடக்கி பிடித்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த வீரபெருமாள் (வயது 37) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சாத்தூர் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தினார்.Related Tags :
Next Story