திருவோணம் அருகே 150 கிலோ புகையிலை ெபாருட்கள் பறிமுதல்


திருவோணம் அருகே 150 கிலோ புகையிலை ெபாருட்கள் பறிமுதல்
x

திருவோணம் அருகே வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்

திருவோணம் அருகே வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரகசிய தகவல்

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள திப்பன்விடுதி கிராமத்தை சேர்ந்த நைனா முகமது மகன் முகமது அப்துல்லா (வயது32). இவர் அதே ஊரில் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டின் ஒரு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா மேற்பார்வையில் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரவேல், அண்ணாதுரை, ஏட்டுகள் இளவரசன், ஜெகன், சின்னத்துரை, தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை முகமது அப்துல்லாவின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புகையிலை பொருட்கள் பதுக்கல்

அப்போது வீட்டின் ஒரு பகுதியில் 15 கிலோ வீதம் 10 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் (ஹான்ஸ்) போலீசார் பறிமுதல் செய்து வட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த முகமது அப்துல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story