"மாண்டஸ்" புயல் காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
"மாண்டஸ்" புயல் காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
தமிழகத்தில் வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஆரஞ்சு அலர்ட் வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இதையொட்டி மாவட்டத்தில் புயல் மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் அவ்வவ்போது லேசாக சாரல் மழை பெய்தது. ஆனால் கன மழை பெய்யவில்லை. இரவு நேரத்தில் மழை தூறிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் "மாண்டஸ்" புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story