இன்றுதான் கடைசி நாள்: ஆன்லைன் ரம்மியால் தற்கொலை நிகழ்ந்தால் கவர்னரே காரணம் - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் ரம்மியால் தற்கொலை நிகழ்ந்தால் கவர்னரே காரணம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நாகை,
நாகையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் பிரச்சனை இருந்ததுனா, மேலும் யாராவது தற்கொலை செய்தார்கள் என்றால் அந்த பழி கவர்னருக்குதான் போய் சேரும். அவசர சட்டம் கொண்டுவந்து சட்டமன்றத்தில் சட்டமசோதாவை அரசு நிறைவேற்றி உள்ளது. ஆனால் கவர்னர் ஏன் இன்னும் கையெழுத்திடவில்லை என்று புரியவில்லை.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இன்றைக்குதான் கடைசி நாள். இந்த மசோதாவை சட்டமாக்கவில்லை என்றால் இது காலாவதியாகிவிடும். அதனால் கவர்னர் இன்றைக்குள் ஆன்லைன் ரம்மியை தடைசெய்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாகை சட்டமாக ஆக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story