கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.எம்.கிசான் இணையதளத்தில் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய இன்று கடைசி நாள் கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்    பி.எம்.கிசான் இணையதளத்தில் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய இன்று கடைசி நாள்    கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.எம்.கிசான் இணையதளத்தில் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய இன்று கடைசி நாள் என கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமரின் கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகள் தங்கள் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் விவரங்களை வலைதளத்தில் சரிசெய்தால் மட்டுமே 13-வது தவணை தொகையை பெற முடியும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 29 ஆயிரத்து 655 விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் உள்ளனர். பி.எம்.கிசான் நிதி திட்டத்தில் பயனடையும் விவசாயிகளில் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை ஏற்கனவே இணைத்துள்ளவர்கள் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் ஆதார் எண் விபரத்தை உள்ளீடு செய்தால் ஓ.டி.பி.எண் தங்களது செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக்கொள்ளலாம். இதுநாள் வரை ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்கள் மற்றும் அஞ்சல் நிலையங்களுக்கு சென்று விரல் ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் திட்ட இணையதளத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் அனைத்து கிராமங்களிலும் இது குறித்து சிறப்பு முகாம் நடத்திவருவதால் அனைத்து விவசாயிகள் இன்று (வியாழக்கிழமைக்குள்)ஆதார் விவரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story