திருக்குவளையின் இன்றைய காலை, வரலாற்றின் புதிய தொடக்கம்! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


திருக்குவளையின் இன்றைய காலை, வரலாற்றின் புதிய தொடக்கம்!  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

எனது அழைப்பை ஏற்று, தங்களது பகுதிகளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி தொடங்கி வைத்தது குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது:-

திருக்குவளையின் இன்றைய காலை, வரலாற்றின் புதிய தொடக்கம்!

நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி 2021 வரை மதிய உணவுத் திட்டங்களே இருந்தன. நூற்றாண்டுகள் கடந்து காலை உணவுத் திட்டம் தொடங்கியுள்ளோம். இந்த முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பசியாற்றவுள்ளது.

எனது அழைப்பை ஏற்று, தங்களது பகுதிகளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றி!

பசிப்பிணி என்பதையே மாணவச் செல்வங்கள் அறியக்கூடாது! அறிவுப்பசி ஒன்றே அவர்களுக்கு வேண்டும்! என அதில் பதிவிட்டுள்ளார்.


Next Story