உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கு: வேல்முருகன் எம்.எல்.ஏ. மீதான விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கு:  வேல்முருகன் எம்.எல்.ஏ. மீதான விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகன் எம்.எல்.ஏ. மீதான விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியன்று உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சுங்கச்சாவடி அடித்து உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 12 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 6 பேர் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. ராஜேஷ், செந்தில்குமார் உள்ளிட்ட மற்ற 6 பேரும் ஆஜராகினர்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நந்தகோபால், தனக்கும் இச்சம்பவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததால் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது வக்கீல் ஆஜராகி, நந்தகோபாலை இவ்வழக்கில் இருந்து விடுவிக்குமாறு வாதிட்டார். அதற்கு அரசு தரப்பில் பதில் அளிப்பதற்காக இவ்வழக்கின் விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.


Next Story