விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு


விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் வாகனங்களின் ரகங்களுக்கு ஏற்பட டிரைவர்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றன. திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூர நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் என்ற தனியார் நிறுவனம் பராமரித்து, வாகனங்களுக்கு விக்கிரவாண்டியில் சுங்க கட்டணத்தை வசூலித்து வருகிறது. ஆண்டு தோறும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் சுங்க கட்டணத்தை உயர்த்துவது வழக்கம்.

1-ந் தேதி முதல் அமல்

இந்த நிலையில் டெல்லி நகாய் உத்திரவின் பேரில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் பள்ளி பஸ் மாதாந்திர கட்டணமும், உள்ளூர் வாகனத்திற்கான மாதாந்திர பாஸ் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.


Next Story