தோளூர்பட்டி மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா


தோளூர்பட்டி மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
x

தோளூர்பட்டி மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது.

திருச்சி

தொட்டியம்:

தொட்டியம் ஒன்றியம் தோளூர்பட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தலைமலைக்கு குட்டி அனுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தாழமடலாயி பிடாரியம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை நடைபெற்றது. பின்னர் திருத்தேர் தலையலங்காரம் நடந்தது. இதில் பக்தர்கள் பூக்களையும், மாலைகளையும் கொண்டு வந்து அம்மனுக்கு படைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் தோளிலும், தலையிலும் தேரை சுமந்து சென்றனர். பக்தர்கள் மா விளக்கு, அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் மகா மாரியம்மன் கோவில் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருத்தேர் ஊர்வலமும், எல்லை உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


Next Story