தக்காளி விலை வீழ்ச்சி


தக்காளி விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 4 Dec 2022 7:00 PM GMT (Updated: 4 Dec 2022 7:00 PM GMT)

அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

திண்டுக்கல்

வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு விளையும் தக்காளிகளை அய்யலூர் ஏல சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கிருந்து தக்காளிகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில தக்காளிகளும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளிமாநில தக்காளி வரத்து அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

நேற்று அய்யலூர் ஏல சந்தையில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டுத்தக்காளி ரூ.70-க்கும், 'ஹைபிரிட்' தக்காளி ரூ.140-க்கும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. சந்தையில் சில்லரை விலைக்கு நாட்டு தக்காளி கிலோ ரூ.5-க்கும், ஹைபிரிட் தக்காளி கிலோ ரூ.10-க்கும் விற்பனையானது. ஆனால் கடைகளில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.30 வரையிலும், 'ஹைபிரிட்' தக்காளி ரூ.20 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story