தக்காளி விலை மீண்டும் உயர்வு


தக்காளி விலை மீண்டும் உயர்வு
x
தினத்தந்தி 31 July 2023 1:45 AM IST (Updated: 31 July 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காய்கறி சந்தை

கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூரில் இருந்து தக்காளி வரத்து குறைவாக இருந்ததால் சுல்தான்பேட்டை, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தக்காளிகளுக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.108 வரைக்கும் விற்பனையானது.

இந்தநிலையில் நேற்று கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை ஆகிய பகுதிகளில் இருந்து 15 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. நேற்று முன்தினம் சந்தைக்கு விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் தக்காளி விற்பனைக்கு வந்தது.

விலை உயர்ந்தது

தற்போது கோவை மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் தக்காளி வரத்து இல்லாததால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் தக்காளிகளை ஏலம் கேட்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். கடந்த 24-ந் தேதி ஒரு கிலோ தக்காளி 84 ரூபாய்க்கு ஏலம் போனது. ஆனால் அதிக கிராக்கி இருந்ததால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் வியாபாரிகள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தக்காளி விலை உச்சத்தை அடைந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு ஏலம் போனது. இது கடந்த வாரத்தை விட ஒரு கிலோவிற்கு 46 ரூபாய் அதிகம் ஆகும். நீண்ட நாட்களுக்கு பிறகு கிணத்துக்கடவு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் தற்காளிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சற்று ஆறுதல்

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தக்காளி விலை நீண்ட நாட்களுக்கு பிறகு அதிகரித்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தக்காளி பயிரிட்டு அதை பாதுகாத்து சந்தைக்கு கொண்டு வரும் செலவு அதிகரிக்கிறது. கடந்த காலங்களில் விலை வீழ்ச்சியை சந்தித்த நிலையில், தற்போது விலை அதிகரித்து உள்ளது, எங்களுக்கு சற்று ஆறுதலை தந்து உள்ளது என்றனர்.

வியாபாரிகள் கூறும்போது, வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதேபோல் உள்ளூரிலும் தக்காளி வரத்து தொடங்காதால் இந்த விலை அதிகரிப்பு உள்ளது. இது நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பு இல்லை. விரைவில் விலை குறை வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story