தங்கமே உன்னைத்தான் தேடி வந்தோம்: பழனியில் தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனை - பொது மக்கள் மகிழ்ச்சி


தங்கமே உன்னைத்தான் தேடி வந்தோம்: பழனியில் தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனை  - பொது மக்கள் மகிழ்ச்சி
x

நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வந்த தக்காளியின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

திண்டுக்கல்,

வடமாநிலங்களில் பெய்து வந்த கனமழை காரணமாக கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து மிகவும் குறைந்தது. இதன் எதிரொலியாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. சமையல் தேவைக்கு தக்காளி என்பது அத்தியாவசியமான பொருளாக உள்ள நிலையில் கடந்த மாதம் முதல் தக்காளி விலை அதிகரித்து வந்தது. ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வந்த தக்காளியின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் பழனியில் தக்காளி விலை அதிரடியாக குறைந்து, ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. பழனி தக்காளி மார்க்கெட்டில் இன்றைய மொத்த விலையாக தக்காளி 14 கிலோ கொண்ட பெட்டி 600 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story