சிவகாசியில் சாரல் மழை

சிவகாசியில் சாரல் மழை பெய்தது.
சிவகாசி,
சிவகாசியில் நேற்று மதியம் 3 மணிக்கு பலத்த இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இந்த மழையினால் நகரின் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. இதேபோல் சிவகாசியை சுற்றி உள்ள கிராமப்பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரம், துரைசாமிபுரம், மடத்துப்பட்டி, மண்குண்டம்பட்டி, சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து பெய்ததால் பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு உடனடியாக தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செவல்பட்டி, துலுக்கன்குறிச்சி பகுதியில் விவசாய பணி தொடங்கி இருந்த நிலையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகியவற்றில் விதை போடும் பணியினை விவசாயிகள் தொடங்கினர்.






