திருச்சியில் கொட்டித்தீர்த்த மழை
திருச்சியில் மழை கொட்டித்தீர்த்தது.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மாலையில் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சியில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் வாட்டியது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணி அளவில் பல பகுதிகளில் மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- கல்லக்குடி3.4, லால்குடி 2.4, புள்ளம்பாடி 2.2, தேவிமங்கலம் 14.4, சமயபுரம் 5, சிறுகுடி 20.4, வாத்தலை அணைக்கட்டு 15, மணப்பாறை 1.6, பொன்னியாறு அணை 2.4, முசிறி 25.2, புலிவலம் 2, நவலூர்கொட்டப்பட்டு 15.5, கொப்பம்பட்டி 2, பொன்மலை 8, திருச்சி விமானநிலையம் 4.4, திருச்சி சந்திப்பு 11.2, திருச்சி டவுன் 7, மொத்தம் 142.1, சராசரி 5.92.
Related Tags :
Next Story