திருச்சியில் கொட்டித்தீர்த்த மழை


திருச்சியில் கொட்டித்தீர்த்த மழை
x

திருச்சியில் மழை கொட்டித்தீர்த்தது.

திருச்சி

திருச்சியில் நேற்று பகல் 1.15 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இடைவிடாது 3 மணி நேரம் பெய்த தொடர் மழையால் திருச்சியில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கியது. குறிப்பாக மத்திய பஸ் நிலையம், உறையூர், கண்டோன்மெண்ட், பாலக்கரை, காந்திமார்க்கெட், வயலூர் என பல்வேறு பகுதிகளிலும் உள்ள சாலையோரங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பாலக்கரை மெயின்ரோட்டில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. இதனால் பாலக்கரை மேம்பாலத்தில் இருந்து மேலப்புதூர் சுரங்கப்பாலம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் மாலை நேரத்திலும் அவ்வப்போது விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதற்கிடையே மழையால் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் ராஜா காலனி அருகே உள்ள தமிழ்நாடு கூட்டுறவு மாநில வளர்ச்சி வங்கி மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி கட்டிடத்தின் மதில் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. செசன்ஸ் கோர்ட்டு போலீசார் அங்கு சென்று சாலையில் கிடந்த சுவர் கற்களை அப்புறப்படுத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


Next Story