சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்


சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்
x

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தஎதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தஎதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய வாகனங்களை வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வாடகைக்கு இயங்குவதை தடை செய்ய வேண்டும். சொந்த பயன்பாட்டு வாகனங்கள் விபத்துகளில் சிக்கும்போது காப்பீடு மூலம், இழப்பீடு பெறுவதற்கு கடும் நிபதனைகள் விதிக்கப்பட வேண்டும். ஒருவழி பாதை என்ற பெயரில் போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் வாகனங்களின் மூலம் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதால் அவ்வாறு இயக்கப்படும் வாகனங்களின் பதிவு எண்ணை தடை செய்ய வேண்டும்.

கால் டாக்ஸி என்ற பெயரில் சட்ட விதிகளுக்கு புறம்பாக இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும் பல ஆண்டுகளாக நலவாரிய பிரிவில் கட்டுமான தொழிலில் இருந்த எங்களுக்கு என்று தனிப்பிரிவு அமைத்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பல்ல கவுண்டன் பாளையத்தில் சுற்றுலா வாடகை வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.

வீரபாண்டி

இதே போல் திருப்பூர் பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இதைத் தொடர்ந்து அரசு தங்கள் கோரிக்கையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வீரபாண்டி ஓட்டுனர் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story