சுற்றுலா வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுற்றுலா வேன் கவிழ்ந்தது
சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த எகியா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 15 பேர் கேரளா மாநிலம் வயநாட்டுக்கு சுற்றுலா சென்றனர்.
அங்கு சுற்றி பார்த்து விட்டு, ஊட்டி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சுற்றுலா வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை மணிகண்டன் (வயது 31) என்பவர் ஓட்டினார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் பர்லியாறு-கல்லாறு இடையே மலைப்பாதையில் வந்த போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
4 பேர் படுகாயம்
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்த எகியா (45), சென்னையை சேர்ந்த அப்ரிடி (24), நைனார் முகமது (57),ஹர்சியா (12) ஆகிய 4 பேரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுற்றுலா வேனில் வந்த மற்றவர்கள் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.