வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

கொடிவேரி அணை வழியாக வினாடிக்கு 2,300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று கோபி அருகே உள்ள கொடிவேரி அணை. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகே உள்ள திருப்பூர், சேலம், கோவை மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு குளித்து மகிழ வருகிறார்கள்.

இந்தநிலையில் கொடிவேரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொடிவேரி அணை வழியாக வினாடிக்கு 2,300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதனால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீர் வரத்து குறைந்த பின் வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பவானி ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் கால்நடைகளை மேய்க்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story