சுருளி அருவியில் 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
தேனி
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதன்படி ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள வெண்ணியாறு, மணலாறு, உள்ளிட்ட 7 அணைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது. உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சுருளி அருவிக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அருவியில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் சில நேரங்களில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் இன்று 8-வது நாளாக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Related Tags :
Next Story