பீமன் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


பீமன் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பீமன் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் பீமன் நீர்வீழ்ச்சி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக தற்போது பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

இந்த நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை கொண்டாடும் வகையில் திருவண்ணாமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜமுனாமரத்துக்கு வருகை தந்து பீமன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story