புத்தாண்டு விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


புத்தாண்டு விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தற்போது புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஊட்டியில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக படகு இல்லம், தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் குவிந்த பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து குடும்பத்துடன் ரோஜா பூங்காவில் ரோஜா மலர்களைக் கண்டும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



Next Story