திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திற்பரப்பு அருவி

சுற்றுலா தலமான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். கடந்த வாரம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது குறைந்ததால் அருவியில் மிதமான தண்ணீர் பாய்கிறது. அத்துடன் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அருவியில் குளித்து சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். அத்துடன் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி ெசய்து குதூகலத்துடன் வீடு திரும்பினர்.

ஏராளமானோர் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மாத்தூர் தொட்டிப்பாலம்

இதேபோல் மாத்தூர் தொட்டிப்பாலத்தையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்தனர். அவர்கள் தொட்டிப்பாலத்தில் நடந்தும், பாலத்தில் இருந்து கீழிறங்கி பிரமாண்டமான தூண்களை பார்த்தும் மகிழ்ந்தனர்.

இதில் ஒரு சில பயணிகள் தொட்டிப்பாலத்தின் கீழ்பகுதியில் ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story