ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 27 Oct 2023 1:00 AM IST (Updated: 27 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை முடிந்தும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. தற்போது ஊட்டியில் 2- வது சீசன் களைகட்டி வருகிறது. இந்த ஆயுத பூைஜயையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு ஊட்டி மாவட்டமே திக்குமுக்காடி போனது. இந்த நிலையில் விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். அவாகள் புல்தரையில் அமர்ந்து இயற்கை அழகை ரசித்தனர். மேலும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story