தண்டவாள பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தம்


தண்டவாள பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தம்
x

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை


தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட சென்னையில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனை தொடர்ந்து இந்த ரெயில் (வ.எண்.16127) வருகிற 15-ந் தேதி முதல்20-ந் தேதி வரையும், 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 29 மற்றும் 30-ந் தேதிகளிலும் எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும்.


Next Story