தண்டவாள பராமரிப்பு பணி: சேலம் - கரூர் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் 2 நாட்களுக்கு முழுமையாக ரத்து


தண்டவாள பராமரிப்பு பணி: சேலம் - கரூர் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் 2 நாட்களுக்கு முழுமையாக ரத்து
x

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம் - கரூர் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் 2 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் - கரூர் மற்றும் கரூர் - சேலம் வழித்தடத்தில் நாமக்கல் வழியாக முன்பதிவில்லா பயணிகள் ரெயில்கள் தினசரி இருமுறை இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், சேலம் ரெயில் நிலையத்தில் செப்.20, 21 ஆகிய தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் பொறியியல் பணி மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக சேலம் - கரூர் வழித்தட மார்க்கத்தில் செல்லும் ரெயில்கள் இன்று மற்றும் நாளை 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதேபோல் மறுமார்க்கத்திலும் கரூர்-சேலம் இடையிலான இரு ரெயில்களின் சேவை, இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story