திருவண்ணாமலை அருகே டிராக்டர் - கார் மோதி விபத்து: 4 பேர் பலியான சோகம்
திண்டிவனம் நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
சென்னை,
திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில் காரில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார், 4 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story