மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; ஓய்வுபெற்ற தபால் ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்;   ஓய்வுபெற்ற தபால் ஊழியர் பலி
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரி (வயது 75). ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் சோழம்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சேமபாளையம் தனியார் பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதில் கீழே விழுந்த மாரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கினார். டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாரி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக அழகாபுரத்தை சேர்ந்த சந்துரு மீது சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story