தூய்மை பணிகளுக்கு பயன்படுத்த டிராக்டர்கள்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணிகளுக்கு பயன்படுத்த டிராக்டர்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த சோமாசிபாடி, மேக்களூர் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக தலா ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 2 டிராக்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு டிராக்டர்களுக்கான சாவிகளை ஊராட்சி தலைவர்கள் சோமாசிபாடி ஏழுமலை, மேக்களூர் கேசவன் ஆகியோரிடம் வழங்கி, டிராக்டர்களை இயக்கியும் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம், ஆணையாளர் பரிமேலழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, பேரூராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், பாக்கியலட்சுமி லோகநாதன், அட்மாகுழு தலைவர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்புஜெயக்குமார், குப்புசாமி, ஊராட்சி செயலாளர்கள் சங்கர், மணிகண்டன், கிளை செயலாளர் அரிபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.