வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போலீஸ் துறை சார்பில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் மதியழகன், பொருளாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனிப்பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேசுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்ட கடை விளம்பர பலகைகளை அகற்றவேண்டும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, நகைக்கடை, உணவு விடுதி அடகு கடை உள்ளிட்ட கடைகளில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதற்கு வர்த்தக சங்க நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து வர்த்தக சங்க நிர்வாகிகள் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டத்தில் போலீசார் முத்துகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன்,வர்த்தக சங்க துணை தலைவர் தியாகராஜன், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story