வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகம் முன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகம் முன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்காததை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக டெங்கு கொசு புழு ஒழிப்பு களப்பணியாளர்களாக பணிபுரிந்து வந்த 4 பேருக்கு தொடர்ந்து பணி வழங்க வாலிகண்டபுரம் வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரை செய்த பின்னரும் பணி வழங்காததை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story