மாமல்லபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது


மாமல்லபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது
x

மாமல்லபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

தொழிலாளர் விரோத கொள்கைகளையும் நான்கு சட்டத் தொகுப்புகளையும் கைவிடக்கோரி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்பாக்கம் அணு மின் நிலைய தொழிற்சங்க ஸ்தாபகர் சக்கரபாணி கலந்து கொண்டார்.

இதில் மத்திய அரசின் தொழிலாளருக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, தமிழகத்தில் அனைத்து தொழிலாளருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், தற்காலிக பணியாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்கள் 240 நாட்கள் பணிபுரிந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது இதனை தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலில், துப்புரவு பணியாளர்கள், மின் ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த மறியல் காரணமாக சுற்றுலா வந்த வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் சாலையில் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது.


Next Story