தொழிற்சங்கத்தினர் மறியல்; 36 பேர் கைது


தொழிற்சங்கத்தினர் மறியல்; 36 பேர் கைது
x

தொழிற்சங்கத்தினர் மறியல் ஈடுபட்டனர். இதையடுத்து 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட குழு சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு தொழிலாளர் விரோத கொள்கைகளையும், நான்கு சட்ட தொகுப்புகளையும் நீக்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி குடிநீரை தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்து, துறைமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story