கார் மோதி வியாபாரி சாவு
மார்த்தாண்டம் அருகே கார் மோதி வியாபாரி இறந்தார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கார் மோதி வியாபாரி இறந்தார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது68). தென்னை மரத்தின் ஈக்கில் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
அய்யப்பன் நேற்று காலையில் வியாபாரத்திற்காக மார்த்தாண்டம் சந்தைக்கு சென்று விட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பயணம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு சொகுசு கார், சைக்கிள் மீது மோதியது. இதில் அய்யப்பன் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.