மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி


மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி
x

மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழந்தார்.

திருச்சி

சாவு

விழுப்புரம் பெரத்தாங்கல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காஜா மொய்தின் (வயது 46). இவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மெயின் ரோடு ஆர்.சி.நகர் சந்திப்பு பகுதியில் பேக் கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையில் வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*திருச்சி பீமநகர் விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மகன் உபயதுல்லா(41). ஆட்டோ டிரைவர். குடும்பச்செலவு காரணமாக வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த உபயதுல்லா வீட்டு உத்திரத்தில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் கைது

* திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் போஸ்(36). இவர் தனியார் உணவு நிறுவனம் ஒன்றில் தில்லை நகர் 10-வது கிராஸ் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தி முனையில் மிரட்டி சைக்கிளை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உறையூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (19) மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர்.

*திருவெறும்பூர் அருகே உள்ள எழில்நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி எழில்நகர் வளர்ச்சி சங்கம் மற்றும் பிற பகுதி ஊராட்சி மக்கள் சார்பாக தெருமுனை பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் ராஜப்பா தலைமையில் பொதுச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் நிலையம் முன் மறியல்

* கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் மற்றும் போலீசார் இ.பி.ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஜெகஜோதி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்த மணிகண்டனை(22) கைது செய்து, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* துவரங்குறிச்சியை அடுத்த அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணிக்கும், அவரது உறவினருக்கும் நீண்ட நாட்களாக வீடு மற்றும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்த ஒரு பெண்ணை 2 பேர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் 2 பேர் மீது துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலசுப்பிரமணியின் உறவினர்கள் துவரங்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போக செய்தனர்.


Next Story